2010-07-19 09:20:40

ஜூலை 19 - நாளும் ஒரு நல்லெண்ணம்


ஆண்டின் 200வது நாள். லீப் ஆண்டுகள் தவிர, மற்ற ஆண்டுகளில் ஜூலை 19 ஆண்டின் 200வது நாள் என கணக்கிடப்படுகிறது. கொண்டாட வேண்டாமா?
100, 200 என்று நாட்களை எண்ணி, திரைப்படங்களின் வெற்றி கொண்டாடப்படுவது வழக்கம். அண்மைக் காலங்களில், ஓர் அரசு 100 நாட்களைப் பதவியில் முடித்தால், வெற்றி விழா கொண்டாடப்படுகிறது. இருவர் திருமணத்தில் இணைந்து 100 நாட்கள் முடித்தால், அதையும் ஒரு சாதனையாக நினைக்க ஆரம்பித்து விட்டோம்.
முன்னொரு காலத்தில், 25 ஆண்டுகளை வெள்ளி விழாவாக, 50 ஆண்டுகளைப் பொன் விழாவாக, 60 ஆண்டுகளை வைர விழாவாக... கொண்டாடி வந்தோம். இப்படி ஒரு பணியில், அல்லது ஒரு வாழ்வு நிலையில் ஆண்டுகளை எண்ணி நிறைவுகளைக் கொண்டாடி வந்த நாம், அவைகளுக்குப் பதில் இப்படி 50 100 200 என்று நாட்களை எண்ணி, அவைகளைச் சாதனைகளாகக் கொண்டாடி வருகிறோம்.
அடுத்து... மணி நேரங்களை, அல்லது மணித் துளிகளை, நொடிகளைச் சாதனைகளாகக் கொண்டாடப் போகிறோமா?
ஓட்டப்பந்தயங்களில் மணித்துளிகளை, நொடிகளைத் துல்லியமாக அளந்து அவற்றைச் சாதனையாகக் கொண்டாடுவது பொருந்தும்.
வாழ்க்கை ஓட்டப்பந்தயமாக, துரித கதியில் ஓட ஆரம்பித்து விட்டதால், நாட்களை, மணித்துளிகளை அளந்து பார்க்க ஆரம்பித்து விட்டோமா? இது முன்னேற்றமா? அல்லது பின்னடைவா?







All the contents on this site are copyrighted ©.