2010-07-19 15:42:39

இத்தாலியின் Pietrasanta நகரில் பல கத்தோலிக்கர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்


ஜூலை 19, 2010 இத்தாலியின் Pietrasanta நகரில் இஞ்ஞாயிறன்று பல கத்தோலிக்கர்களும், அப்பகுதி பங்குத் தந்தையும் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.



அன்னை மரியாவின் கைகளில் குழந்தை வடிவில் Adolph Hitler அமர்ந்திருப்பதைப் போல் Giuseppe Veneziano என்ற இத்தாலிய கலைஞர் வரைந்திருந்த ஓர் ஓவியம் இந்தப் போராட்டத்திற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.



Veneziano என்ற கலைஞர் வரலாற்றில் இடம் பெற்றுள்ள பலரைக் கேலி செய்யும் வண்ணம் வரைந்துள்ள இது போன்ற பல ஓவியங்களைக் கொண்டு Pietrasanta நகரில் ஓவியக் கண்காட்சி ஒன்றை நடத்தும் நோக்குடன் வெளி வந்த இந்த சுவரொட்டி கத்தோலிக்கர்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளதாகச் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.



இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து, அந்த நகர மேயர் பொது மன்னிப்பு கேட்டதாகவும், அந்த சுவரொட்டிகளை நகரின் பல பகுதிகளிலிருந்தும் நீக்கியது மட்டுமல்லாது, அந்த ஓவியத்தையும் கண்காட்சியிலிருந்து நீக்கியுள்ளதாகவும் அச்செய்திக் குறிப்பு மேலும் கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.