2010-07-17 15:44:43

நைஜீரிய ஆயர் - ஆள்கடத்தல்கள் 2011ம் ஆண்டு தேர்தல்களைப் பாதிக்கும்


ஜூலை17,2010 நைஜீரியாவில் பரவலாக இடம் பெற்று வரும் ஆள்கடத்தல்கள், அந்நாட்டின் 2011ம் ஆண்டு பொதுத் தேர்தல்களின் நம்பகத்தன்மையைப் பாதிக்கக்கூடும் என்று அந்நாட்டின் Oyo ஆயர் Emmanuel Badejo எச்சரித்தார்.

நைஜீரியாவின் தென்கிழக்கு மாநிலத்தில் ஒரு வாரத்திற்குள் நான்கு பத்திரிகையாளர்களும் அவர்களது வாகன ஓட்டுனரும் கடத்தப்பட்டிருப்பதையொட்டி அரசை எச்சரித்த ஆயர், பத்திரிகையாளர்களைக் கடத்தும் புதிய போக்கு நாட்டிற்குக் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறினார்.

இத்தகைய குற்றங்கள் கண்டு கொள்ளாமல் விடப்பட்டால், உண்மை, நீதி மற்றும் நியாயத்திற்கான நாட்டின் பணிகளில் கேடு விளைவிக்கக்கூடும் என்று ஆயர் அரசை மேலும் எச்சரித்தார்.








All the contents on this site are copyrighted ©.