2010-07-16 16:07:55

இந்தியா, உலகின் மனித வியாபாரத்தின் மையம்


ஜூலை16,2010 இந்தியா, மனித வியாபாரம் மற்றும் கட்டாய வேலை தொடர்பான விபசார விவகாரத்தில் உலகின் மையமாக விளங்குகிறது என்று அமெரிக்க ஐக்கிய நாடு வெளியிட்ட அண்மை அறிக்கை ஒன்று கூறுகிறது.

இந்தியாவில், விபச்சாரத் தொழிலுக்காக 12 இலட்சத்துக்கு மேற்பட்ட சிறார், மனித வியாபாரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும், பத்து கோடிக்கு மேற்பட்ட மக்கள் மனித வியாபாரம் தொடர்புடைய செயல்களில் ஈடுபட்டுள்ளனர் என்றும் அவ்வறிக்கை தெரிவிக்கிறது.

இந்தியாவில் இடம் பெறும் மனித வியாபாரங்களில் 90 விழுக்காடு, ஒரிசா, ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், சட்டீஸ்கார் போன்ற ஏழை மாநிலங்களை மையமாக வைத்து நடத்தப்படுகின்றன என்று அந்த அமெரிக்க ஆய்வறிக்கை கூறுகிறது.

இந்தியாவில் “சிறுமிகள் பாலியல் சுற்றுலா” பெரும் இலாபம் ஈட்டும் தொழிலாக இடம் பெற்று வரும் வேளை, 2009ம் ஆண்டில் மட்டும் நூறுகோடிச் சிறுமிகள் இதில் உட்படுத்தப்பட்டனர், இது முந்தைய ஆண்டுகளைவிட 30 விழுக்காடு அதிகம் என்று கூறப்படுகிறது.








All the contents on this site are copyrighted ©.