2010-07-16 16:04:50

அடிப்படைவாதமும் மதமாற்றத் தடைச் சட்டங்களும் சமய சுதந்திரத்திற்கு முரணாணவை – மும்பை கர்தினால்


ஜூலை16,2010 அடிப்படைவாதமும் மதமாற்றத் தடைச் சட்டங்களும் சமய சுதந்திரத்திற்கு முரணாணவை என்று இந்திய ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் ஆஸ்வால்டு கிராசியாஸ் கூறினார்.

2011ம் ஆண்டின் உலக அமைதி தினத்தின் தலைப்பாகிய “சமய சுதந்திரம் - அமைதிக்கான பாதை” என்பது பற்றி Fides செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த கர்தினால் கிராசியாஸ், அமைதியை அடைவதற்கான ஒரேவழி சமய சுதந்திரமே என்று கூறினார்.

இந்தத் தலைப்பானது இந்தியாவுக்கும் உலகுக்கும் மிகவும் முக்கியமானது என்று கூறிய அவர், இந்தியாவின் பல மாநிலங்களில், இந்துமத அடிப்படைவாதமும் “மதமாற்றத் தடைச் சட்டங்களும்” அமலில் இருப்பதைச் சுட்டிக் காட்டினார்.

பல்வேறு சமய மற்றும் பல்வேறு கலாச்சாரங்களைக் இந்தியாவில் சில குழுக்கள் மதத்தைத் தவறாகப் புரிந்து கொண்டுள்ளன என்றும், சமூகத்தின் நல்லிணக்கத்தைக் குலைப்பதற்கு மதத்தை அக்குழுக்கள் பயன்படுத்துகின்றன என்றும் மும்பை கர்தினால் ஆஸ்வால்டு கிராசியாஸ் குறைகூறினார்.








All the contents on this site are copyrighted ©.