2010-07-16 16:06:55

Lancashire ல் சர்வதேச கிறிஸ்தவ ஒன்றிப்பு மாநாடு


ஜூலை16,2010 40வது சர்வதேச கிறிஸ்தவ ஒன்றிப்பு மாநாடு இம்மாதம் 19 முதல் 26 வரை பிரான்சின் லியோனில் நடைபெறவுள்ளது.

எட்டு நாள்கள் நடைபெறும் இம்மாநாட்டில் பத்து ஐரோப்பிய நாடுகளின் சுமார் 450 பிரதிநிதிகள் கலந்து கொள்வர்.

மேலும், இம்மாதம் 19 முதல் 22 வரை பிரிட்டனின் லாங்கஷரில் புனித கன்னிமரியின் கிறிஸ்தவ ஒன்றிப்பு கழகம், சர்வதேச கிறிஸ்தவ ஒன்றிப்பு மாநாட்டை நடத்தவுள்ளது.

1910ம் ஆண்டில் எடின்பர்கில் முதல் கிறிஸ்தவ ஒன்றிப்பு மறைபோதக மாநாடு நடந்தது மற்றும் திருப்பீட கிறிஸ்தவ ஒன்றிப்பு அவை உருவாக்கப்பட்டதன் 50ம் ஆண்டு ஆகியவற்றைக் குறிக்கும் விதமாக இந்த மாநாடு நடைபெறுகின்றது







All the contents on this site are copyrighted ©.