2010-07-15 14:38:21

விடுதலை செய்யப்பட்ட சீன ஆயருக்குத் திருத்தந்தை தன் வாழ்த்துக்களையும், அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கியுள்ளார்


ஜூலை 15, 2010 சென்ற வாரம் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட சீன ஆயருக்குத் திருத்தந்தை தன் வாழ்த்துக்களையும், அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கியுள்ளார் என கர்தினால் ஐவன் டயஸ் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.
75 வயதான ஆயர் Julius Jia Zhiguoவை 15 மாதங்கள் சிறையில் வைத்திருந்த சீன அரசு, கடந்த சனிக்கிழமை விடுவித்தது. இதைத் தொடர்ந்து, ஆயர் Jia, Zhengding மறைமாவட்டப் பொறுப்புக்களை மீண்டும் ஏற்றுக் கொண்டார்.
இந்த விடுதலையைக் குறித்தும், ஆயர் தன் மறைமாவட்டத்தில் பணிகளைத் தொடர்வது குறித்தும் திருத்தந்தை மிகவும் மகிழ்ந்திருப்பதாக மறைபரப்பு பணி ஆணையத்தின் தலைவரான கர்தினால் ஐவன் டயஸ் தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
ஆயர் Jia கடந்த ஆறு ஆண்டுகளில் 13 முறை கைது செய்யப்பட்டுள்ளார் என்றும், சீனாவின் Hebei பகுதியில் 76 வயதான ஆயர் James Su Zhimin 1996ம் ஆண்டிலிருந்தும், 87 வயதான ஆயர் Cosmas Shi Enxiang 2001ம் ஆண்டிலிருந்தும் காணவில்லை என்றும் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.இதற்கிடையே, கடந்த சனிக்கிழமை 75 வயதான Antonio Xu Jiwei என்ற குரு Zhejiang மறைமாவட்ட ஆயராகத் திருநிலைபடுத்தப்படார் என்று மற்றுமொரு செய்திக் குறிப்பு கூறுகின்றது.







All the contents on this site are copyrighted ©.