2010-07-15 14:39:22

2011ம் ஆண்டிற்கான கிறிஸ்துவ ஐக்கிய வாரத்தின் மையக் கருத்தையும், செபங்களையும் எருசலேமில் உள்ள கிறிஸ்துவ சபைகள் தயாரித்து வருகின்றன


ஜூலை 15, 2010 வருகிற 2011ம் ஆண்டு ஜனவரியில் நடைபெறும் கிறிஸ்துவ ஐக்கிய (ஒற்றுமை) வாரத்தின் மையக் கருத்தையும், செபங்களையும் எருசலேமில் உள்ள திருச்சபையும், ஏனைய கிறிஸ்துவ சபைகளும் தயாரித்து வருகின்றன.
"திருத்தூதர் கற்பித்தவற்றிலும் நட்புறவிலும் அப்பம் பிடுவதிலும் இறை வேண்டலிலும் உறுதியாய் நிலைத்திருந்தார்கள்." என்று திருத்தூதர் பணிகளில் வரும் இறைவார்த்தைகள் வரும் ஆண்டு கிறிஸ்துவ ஐக்கிய (ஒற்றுமை) வாரத்திற்கான மையக் கருத்தாக இருக்குமென்று கூறப்பட்டுள்ளது.
ஆர்த்தடாக்ஸ், லூத்தரன், Episcopal மற்றும் சில கிறிஸ்துவ சபைகள் இணைந்து இந்த செபங்களை உருவாக்குகின்றன. பிரிவுகளையும், ஒப்புரவு முயற்சிகளையும் அனுபவித்த எருசலேம் சபைகள் கிறிஸ்துவ ஐக்கிய (ஒற்றுமை) வாரத்திற்கான செபங்களை உருவாக்குவது பொருத்தமான ஒரு முயற்சி என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.ஒவ்வொரு ஆண்டும் சனவரி 18 முதல் 25 வரையிலான வாரம் கிறிஸ்துவ ஐக்கிய (ஒற்றுமை) வாரம் என்று கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.







All the contents on this site are copyrighted ©.