உலக இளையோர் மாநாட்டில் ஐந்து நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த நற்கருணைப் பாத்திரம் ஒன்று
பயன்படுத்தப்படும்
ஜூலை 14, 2010. வரும் 2011ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஸ்பெயின் நாட்டின் மத்ரித் நகரில்
நடைபெறவிருக்கும் உலக இளையோர் மாநாட்டில் ஐந்து நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த நற்கருணைப்
பாத்திரம் ஒன்று பயன்படுத்தப்படும்.
உலக இளையோர் மாநாட்டில் திருத்தந்தை முன்னின்று
நடத்தும் நற்கருணை ஆராதனை வழிபாட்டின் போது, ஸ்பெயின் நாட்டின் Arfe கலைக் குடும்பத்தைச்
சேர்ந்த இந்தப் பழைமையான நற்கருணைப் பாத்திரம் பயன்படுத்தப்படும் என்று இம்மாநாட்டைக்
குறித்து இச்செவ்வாயன்று வெளியான அறிக்கை ஒன்று கூறுகிறது.
ஒன்பதடி உயரமான
இந்த நற்கருணை பாத்திரம் தங்கம் வெள்ளி ஆகிய உலோகங்களால் வடிவமைக்கப்பட்டதெனவும், ஸ்பெயினில்
உள்ள பல கலை படைப்புக்களில் இதுவும் ஒரு அரிய படைப்பென்றும் செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.