2010-07-12 15:48:28

நைஜீரியாவில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்களைத் தடுக்குமாறு அரசுத்தலைவருக்கு அழைப்பு விடுத்துள்ளது சர்வதேச பிறரன்பு அமைப்பு ஒன்று


ஜூலை 12, 2010 நைஜீரியாவின் கடுனா மாநிலத்தில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெறுவதைத் தடுக்கும் நோக்கில் அந்நாட்டு புதிய அரசுத்தலைவர் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது சர்வதேச பிறரன்பு அமைப்பு ஒன்று.

உலகின் பல பகுதிகளில் சித்ரவதைப்படுத்தப்படும் கிறிஸ்தவர்களுக்கு உதவி வரும் Release International எனும் பிறரன்பு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த வாரத்தில் ராணுவ உடையில் இருந்த இஸ்லாமியத் தீவிரவாதக் குழு ஒன்று துப்பாக்கியால் சுட்டதில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளதையும், மார்ச் மாதத்தில் ஜோஸ் பகுதியில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதலில் 520 பேர் கொல்லப்பட்டதையும் சுட்டிக்காட்டியுள்ளது.

கிறிஸ்தவர்கள் எந்நேரத்திலும் தாக்கப்படலாம் என்ற அச்சம் நிலவி வந்த போதிலும் அவர்களை காப்பாற்ற காவல்துறை போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளது Release International எனும் பிறரன்பு அமைப்பு.

இந்தப் பிறரன்பு அமைப்பு, விசுவாசத்திற்காக சிறைவைக்கப்பட்டுள்ளோரிடையே 30 நாடுகளில் சேவையாற்றி வருகின்றது.








All the contents on this site are copyrighted ©.