2010-07-12 15:48:03

உலகக் கால்பந்து போட்டி, ஆப்ரிக்க மக்களிடையே ஒருமைப்பாட்டை வளர்த்துள்ளது என்கிறார் கர்தினால்


ஜூலை 12, 2010. தென்னாப்ரிக்காவில் இஞ்ஞாயிறன்று முடிவடைந்த உலகக் கால்பந்து போட்டி, சர்வதேச நாடுகளுடன் அந்நாட்டு ஐக்கியத்தையும், ஏனைய ஆப்ரிக்க நாடுகளுடன் ஒருமைப்பாட்டையும் குறித்த மேலோங்கிய உணர்வை வழங்கியுள்ளதாக அறிவித்தார் தென் ஆப்ரிக்க கர்தினால் Wilfrid Napier.

தென் ஆப்ரிக்க மக்களால் அதிகம் நேசிக்கப்படுகின்ற கால் பந்து விளையாட்டின் உலக அளவிலான போட்டி தங்கள் நாட்டிலேயே இடம்பெற்றது குறித்து மகிழும் தென்னாப்ரிக்க மக்கள் தங்கள் நாடும் இவ்விளையாட்டைப் பொறுத்தவரையில் சர்வதேச அங்கீகாரம் பெற்றுள்ளது குறித்து மேலும் பெருமையடைவதாக கூறினார் டர்பன் பேராயர் கர்தினால் Napier.

சர்வதேச அளவிலான விளையாட்டுப்போட்டிகளுக்கான ஏற்பாடுகளைக் கவனிப்பதில் வெற்றி கண்டுள்ள தென்னாப்ரிக்கத் தலைவர்கள் தற்போது கல்வி, நலஆதரவு போன்ற துறைகளிலும் இத்தகைய ஈடுபாட்டுடன் செயல்படவேண்டும் என விண்ணப்பித்தார் அவர்.

கறுப்பினத்தவரும் வெள்ளையினத்தவரும் இணைந்து வாழ்வதும், ஏனைய ஆப்ரிக்கர்கள் தென்னாப்ரிக்காவில் மதித்து ஏற்றுக்கொள்ளப்படுவதும் இயலக்கூடியதாகியுள்ளது குறித்த மகிழ்ச்சியையும் வெளியிட்டார் கர்தினால் Napier.








All the contents on this site are copyrighted ©.