2010-07-10 16:23:50

வியட்னாம் அரசு சட்ட விரோதமாகப் பறித்த நிலத்திற்கான இழப்பீட்டுத் தொகைக்கு விண்ணப்பித்துள்ளது அந்நாட்டு பெண்துறவு சபை ஒன்று.


ஜூலை 10, 2010. 33 ஆண்டுகளுக்கு முன்னால் தங்களிடமிருந்து சட்ட விரோதமாகப் பறித்துக்கொண்ட நிலத்திற்கான இழப்பீட்டுத்தொகையை வழங்குமாறு வியட்னாம் அரசுக்கு விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ளது அந்நாட்டு பெண்துறவு சபை ஒன்று.

1977ம் ஆண்டு தங்களிடமிருந்து பறித்துகொண்ட 10,235 சதுர மீட்டர் நிலம் தற்போது அரசின் மதிப்புப்படியே 64 இலட்சத்து 21 ஆயிரம் டாலர்கள் எனக்கூறும் Saint Paul de Chartres என்ற துறவு சபை, அரசு இப்பணத்தை அல்லது நிலத்தை திருப்பித்தர வேண்டும் என விண்ணப்பித்துள்ளது.

1871ம் ஆண்டில் இந்நிலத்தை வாங்கி அனாதைகள், ஏழைச் சிறார்கள் மற்றும் முதியோர்களுக்கென ஒரு கட்டிடத்தைக் கட்டி சேவையாற்றிவந்த இக்கன்னியர்களை 1977ம் வருடம் அங்கிருந்து விரட்டிய வியட்னாம் அரசு அதிகாரிகள், தற்போது அவ்விடத்தில் நகரச்சதுக்கம் ஒன்றைக் கட்டத்தொடங்கியுள்ளதைத் தொடர்ந்து, இழப்பீட்டுத்தொகைக்கென விண்ணப்பித்துள்ளது இத்துறவு சபை.

வியட்நாமின் கம்யூனிச அரசால் பல்வேறு திருச்சபைக் கட்டிடங்கள் எவ்வித இழப்பீட்டுத்தொகையும் வழங்காமல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.