2010-07-10 16:16:13

நாத்ஸி வதைப்போர் காலத்தில் ஏறத்தாழ 2இலட்சம் யூதர்கள் ஜெர்மனியிலிருந்து வெளியேறுவதற்கு திருத்தந்தை 12ம் பத்திநாதர் உதவியுள்ளார் என்கிறார் ஜெர்மன் வரலாற்று ஆசிரியர்.


ஜூலை 10, 2010. இரண்டாம் உலகப்போரின் நாத்ஸி வதைப்போர் காலத்தில் ஏறத்தாழ 2இலட்சம் யூதர்கள் ஜெர்மனியிலிருந்து வெளியேறுவதற்குத் திருத்தந்தை 12ம் பத்திநாதர் உதவியுள்ளது வரலாற்று ஏடுகள் மூலம் தெளிவாகத் தெரிவதாக ஜெர்மன் வரலாற்று ஆசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

திருப்பீடத்தின் வரலாற்றுக் கோப்புகளை ஆய்வு செய்த பின் இதனைத் தெரிவித்த அமெரிக்காவின் மதங்களிடையேயான குழுவான Pave the Way Foundation னின் Micheal Hesemann, கிறிஸ்தவத்திற்கு மதம் மாறிய யூதர்கள் ஜெர்மனியிலிருந்து வெளியேறி ஏனைய நாடுகளில் குடியேற உதவும் வண்ணம் குடியேற்ற அனுமதியைப் பெற்றுத்தருமாறு உலகின் ஆயர்களுக்குத் திருத்தந்தை எழுதியக் கடிதத்தை மேற்கோள் காட்டியுள்ளார்.

ஜெர்மன் அதிகாரிகளைத் திசைத்திருப்பவே " மதம் மாறிய யூதர்கள்" என்ற பதத்தைத் திருத்தந்தை பயன்படுத்தினார் எனவும் இவ்வாராய்ச்சியாளர் குறிப்பிட்டுள்ளார்.

கிறிஸ்தவத்திற்கு மதம் மாறியக் கிறிஸ்தவர்களையும் நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கவேண்டும் என்ற ஒப்பந்தம் ஜெர்மனிக்கும் வத்திக்கானுக்கும் இடையே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனைப் பயன்படுத்தி சாதாரண யூதர்களும் தப்பிக்கத் திருத்தந்தை இரகசியமாக உதவியுள்ளார் என்கிறார் வரலாற்று ஆசிரியரான Hesemann.








All the contents on this site are copyrighted ©.