2010-07-09 15:41:31

பெரு நாட்டிலிருந்து அருள் சகோதரர் Paul McAuley வெளியேறுமாறு விதிக்கப்பட்ட அரசாணை இவ்வியாழனன்று திரும்பப் பெறப்பட்டது


ஜூலை 09, 2010 பெரு நாட்டில் பழங்குடியினரிடையே பணி புரிந்து வந்த அருள் சகோதரர் Paul McAuleyக்கு அந்நாட்டை விட்டு வெளியேறுமாறு விதிக்கப்பட்ட அரசாணை இவ்வியாழனன்று திரும்பப் பெறப்பட்டது.
‘லொரேட்டோ சுற்றுச் சூழல் இணையம்’ என்ற ஒரு அமைப்பை நிறுவி, அதன் மூலம் கடந்த ஆறு ஆண்டுகளாக அமேசான் காடுகளில் வாழும் பழங்குடியினர் மத்தியில் சுற்றுச் சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் அருள் சகோதரர் Paul McAuleyக்கு எதிராக விதிக்கப்பட்ட இந்த அரசாணையை திரும்பப் பெறுமாறு பெரு நாட்டின் துறவற சபைகளின் அமைப்பும் இன்னும் பல அரசுசாரா அமைப்புகளும் நிகழ்த்திய போராட்டங்கள் அரசை இந்த முடிவுக்குக் கொண்டு வந்திருக்கலாம் என்று செய்திகள் கூறுகின்றன.
பழங்குடியினருக்கு எதிராக அரசு மேற்கொள்ளும் முயற்சிகளும், அரசின் நடவடிக்கைகளைக் குறித்து கேள்விகள் எழுப்பும் சமுதாய அமைப்புகளை அரசு நடத்தும் விதமும் அதிர்ச்சியைத் தருகிறதென Amnesty International அமெரிக்கக் கிளையின் உதவி இயக்குனர் Guadalupe Marengo கூறினார்.







All the contents on this site are copyrighted ©.