2010-07-09 14:44:08

ஜூலை 10. நாளும் ஒரு நல்லெண்ணம்


"கண்ணொடு கண் இணை கவ்வி ஒன்றை ஒன்று

உண்ணவும் நிலைபெறாது உணர்வும் ஒன்றிட

அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்".

கம்பரின் இந்த காந்த வரிகள் கண்வழி இதயம் இடம் மாறுவதைக் காட்டுகிறது.

திருவள்ளுவரும் கூறுவார், "கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின், வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல" என்று.

கண்ணுக்குள்தான் எத்தனை கவிதைகள்?

கண் சிவந்தான், கண் திறந்தான், கண் மூடினான், கண்ணசைத்தான், கண்ணடித்தான், கண்ணோக்கினான், கண்டுகொண்டான் என கண்ணுக்குள் தான் எத்தனை அர்த்தங்கள்?

பயத்தையும், பச்சாதாபத்தையும், அன்பையும், கனிவையும், காதலையும், கழுவாயையும், கோபத்தையும், கோரத்தையும் காட்டி நிற்கும் கண்ணுக்குள் தான் எத்தனை செயல்பாடுகள்?

வாய் பேசி கை அணைத்தாலும் உணர்வுகள் வெளிப்படுவது கண் வழிதானே?

இறைவனின், மனிதனின் கனிவான கடைக்கண் பார்வைக்காய் ஏங்கி நிற்கும் மனிதனே!

முதலில் உன் பார்வைகள் பக்குவப்படட்டும்.








All the contents on this site are copyrighted ©.