2010-07-09 15:42:08

கொழும்பிலுள்ள தனது அலுவலகத்தை மூட ஐ.நா. அவை முடிவு செய்துள்ளது


ஜூலை 09, 2010 அமைச்சர் விமல் வீரவன்ஸ (Wimal Weerawansa) தலைமையிலான போராட்டத்தை அடுத்து கொழும்பில் உள்ள தனது அலுவலகத்தை மூட ஐ நா முடிவு செய்துள்ளது.
இலங்கையின் தலைநகர் கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் அவையின் அலுவலகப் பணிகள் சுமுகமாக நடைபெறுவதில் ஏற்பட்டுள்ள தடைகளை அகற்ற இலங்கை அரசு முயற்சிகள் எடுக்கத் தவறியது ஏற்றுக் கொள்ளமுடியாததெனவும், எனவே அவ்வலுவலகத்தை மூட தான் முடிவு செய்துள்ளதாகவும் ஐ.நா.வின் தலைமைச் செயலர் Ban Ki-moon கருதுவதாக அவரது சார்பில் வெளியாகியுள்ள அறிக்கை கூறுகிறது. இலங்கை அரசு தனது கடமைகளை உணர்ந்து, பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் இலங்கை மக்களுக்கு தாங்கள் செய்து வரும் உதவிகள் தங்குதடையின்றி கிடைப்பதை இலங்கை அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் ஐ நா வின் தலைமைச் செயலரின் சார்பில் வெளியாகியுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.