2010-07-08 15:37:29

தாய்லாந்தில் அவசர நிலையை மேலும் நீட்டித்திருப்பது நாட்டின் ஒற்றுமையை வளர்க்கும் முயற்சிக்குப் பெரிதும் தடையாக இருக்கும் - கத்தோலிக்க ஆணையத்தின் ஆலோசகர்


ஜூலை 08, 2010 தாய்லாந்தில் அவசர நிலையை மேலும் நீட்டித்திருப்பது நாட்டின் ஒப்புரவையும், ஒற்றுமையும் வளர்க்கும் முயற்சிக்குப் பெரிதும் தடையாக இருக்கும் என்று நீதி மற்றும் சமாதானத்திற்கான கத்தோலிக்க ஆணையத்தின் ஆலோசகர் கூறியுள்ளார்.
மே மாதம் 19 அன்று முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட தாய்லாந்தின் போராட்டத்திற்குப் பின் அந்நாட்டில் அமல் படுத்தப்பட்ட அவசர நிலையை, இச்செவ்வாயன்று அந்நாட்டின் பாராளு மன்றம் ஒரு சில பகுதிகளில் தளர்த்தியிருந்தாலும், பாங்காக் போன்ற முக்கிய இடங்களில் அவசர நிலையை நீட்டித்திருப்பது நாட்டின் குடியரசுக் கொள்கைகளுக்கு முரண்பாடானதென நீதி மற்றும் சமாதானத்திற்கான கத்தோலிக்க ஆணையத்தின் ஆலோசகர் Sarawut Pathumrat கூறினார்.
இதற்கிடையே, இப்புதனன்று கூடிய பல்சமயக் கருத்தரங்கில் பேசிய சமயத் தலைவர்கள், தங்கள் நாடு மீண்டும் ஆன்மீக மதிப்பீடுகளுக்குத் திரும்புவதே அதன் வளர்ச்சிக்கு மிகவும் பயன்படும் என்று கூறியுள்ளனர்.கோபம், பகைமை உணர்வு இவைகளுக்குப் பதில், அன்பு, நன்னெறி இவைகளை நாட்டு மக்கள் நம்பி வாழ்வதே தாய்லாந்தை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் என்று அருள்தந்தை Picharn Jaiseri கூறினார்.







All the contents on this site are copyrighted ©.