2010-07-07 16:17:45

ஜூலை 08 – நாளும் ஒரு நல்லெண்ணம்


இதமாகி இளகக்கூடியதும்,

பாறையாய் இறுகக்கூடியதும்,

கண்ணாடியாய் நொறுங்கக்கூடியதும்,

கொடுமையாகும்போது இல்லாததாகி,

கருணை நிறைவில் இருப்புடையதாகி,

இடம் மாறி இயக்கத்தைக் காட்டி,

திறக்கவல்ல கதவுடையதாய்,

காலியாகி காத்திருப்பதாய்,

நினைவுகளைத் தரவல்ல ஊற்றாய்,

கனவுகளைப் பிறப்பிக்கவல்ல கருப்பையாய்,

கொள்ளை போகவல்ல விலை மதிப்பற்றதாய்,

பூப்போன்ற மிருதுவாய் இருக்கக்கூடியது எது என விடுகதைப் போட்டால் விடை காண அதிக நேரம் தேவையில்லை.

ஆம். இதயம் தான் அது.

இத்தனை சிறப்பு நிறைந்த இதயத்தை எங்கே ஒளித்து வைத்திருக்கிறோம்?

ஏன் இன்னும் திறக்க மறுக்கிறோம்?

உடலுக்குள் ஒளிந்திருக்கும் அதனை மட்டும் தான் திறக்கவும் முடியும், இலவசமாகக் கொடுக்கவும் முடியும். கொடுத்த பின்னரும் முழுமையாக வைத்திருக்கவும் முடியும்.

நம் இதயங்கள் திறந்துள்ளனவா?








All the contents on this site are copyrighted ©.