2010-07-07 15:54:13

இங்கிலாந்து அரசு திருத்தந்தையின் திருப்பயணத்தை முழுமையாக ஆதரிக்கிறது அரசு அதிகாரி


ஜூலை 07, 2010 இங்கிலாந்து அரசு திருத்தந்தையின் திருப்பயணத்தை முழுமையாக ஆதரிக்கிறது என்று திருத்தந்தையின் திருப்பயணம் குறித்த அரசின் முன்னேற்பாடுகளைக் கண்காணித்து வரும் Lord Patten கூறினார்.
வறுமையை ஒழித்தல், கல்வி, மக்கள் நலம் என்ற உலகின் பல்வேறு சமுதாய அம்சங்களில் கத்தோலிக்கத் திருச்சபையுடன் இங்கிலாந்து அரசும் இணைந்து செயல்படுவதைச் சுட்டிக் காட்டிய Lord Patten, இந்த முயற்சிகளை மேலும் வலுப்படுத்த திருத்தந்தையின் திருப்பயணம் உதவும் என்று கூறினார்.
Lord Patten உடன் சேர்ந்து, செய்தியாளர்களை இத்திங்களன்று சந்தித்த இங்கிலாந்து ஆயர் பேரவையின் தலைவர் பேராயர் வின்சென்ட் நிக்கோல்ஸ், தான் அண்மையில் திருத்தந்தையை வத்திக்கானில் சந்தித்ததையும், அச்சந்திப்பின் போது, திருத்தந்தை இந்தத் திருப்பயணம் குறித்த தன் ஆர்வத்தை அதிகம் வெளிப்படுத்தியதையும் கூறினார்.திருத்தந்தை ஒருவர் முதன் முறையாக அதிகாரப் பூர்வமாக இங்கிலாந்துக்கு மேற்கொள்ளும் இத்திருப்பயணம், பல வகையிலும் உரையாடல்களையும், ஒத்துழைப்பையும் வளர்க்கும் ஒரு தருணமாக அமையும் என்று பேராயர் நிக்கோல்ஸ் மேலும் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.