2010-07-05 15:38:17

ஜூலை 06 வரலாற்றில் இன்று


1535 - தாமஸ் மூர் தேசத் துரோகத்துக்காக இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியினால் தூக்கிலிடப்பட்டார்.

1885 - பிரெஞ்சு வேதியியலாளர் லூயி பாஸ்டர் தான் கண்டுபிடித்த தடுப்பூசி மருந்தை வெறிநாய் ஒன்றினால் கடிபட்ட ஒன்பது வயது ஜோசப் மெயிஸ்டர் என்ற சிறுவனில் வெற்றிகரமாகச் சோதனை செய்தார்.

1892 - தாதாபாய் நவரோஜி பிரித்தானியப் நாடாளுமன்றத்தின் முதலாவது இந்தியப் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1939 - ஜெர்மனியில் இருந்த கடைசி யூத தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டன.

1947 - சோவியத் யூனியன் ஏகே-47 ரகத் துப்பாக்கிகளை தயாரிக்க ஆரம்பித்தது.

1956 - சிங்களம் இலங்கையின் அதிகாரப்பூர்வ மொழியானது.

1966 - மலாவி குடியரசாகியது.

ஜூலை 6 புனித மரிய கொரற்றி விழா








All the contents on this site are copyrighted ©.