2010-07-05 15:44:46

இங்கிலாந்தில் திருத்தந்தையின் முக்கிய பயணத்திட்டங்கள் குறித்து அறிவித்துள்ளார் திருப்பீடப் பேச்சாளர்.


ஜூலை 05, 2010. இங்கிலாந்து அரசி மற்றும் தல ஆயர் பேரவையின் அழைப்பின் பேரில் செப்டம்பர் 16 முதல் 19 வரை அந்நாட்டில் பயணம் மேற்கொள்ள உள்ள திருத்தந்தையின் முக்கிய பயணத்திட்டங்கள் குறித்து குறிப்பொன்றை வெளியிட்டுள்ளார் திருப்பீடத்தின் அதிகாரப்பூர்வப் பேச்சாளர் குரு. ஃஃபெதரிக்கோ லொம்பார்தி.

இங்கிலாந்து அரசி இரண்டாம் எலிசபெத்தை எடின்பர்க்கின் Holyrood House அரண்மனையில் சந்திக்கவுள்ள திருத்தந்தை, அதன்பின் வெஸ்ட் மின்ஸ்டர் அரங்கில் அரசியல், கலாச்சார மற்றும் தொழில்துறைப் பிரதிநிதிகளையும் சந்தித்து உரை வழங்குவார்.

திருத்தந்தை பங்கு பெறும் ஏனைய நிகழ்ச்சிகளாக, இலண்டனின் Hyde பூங்காவின் மாலை ஜெப வழிபாடு, வெஸ்ட்மின்ஸ்டர் துறவு மடத்திலான கிறிஸ்தவ ஐக்கிய வழிபாடு, Glasgow Bellahouston பூங்காவிலும் வெஸ்ட்மின்ஸ்டர் பேராலயத்திலும் விசுவாசிகளுக்கென நிறைவேற்றும் திருப்பலி ஆகியவைத் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அனைத்திற்கும் மணிமகுடமாக இத்திருப்பயணத்தின்போது திருத்தந்தை, பிர்மிங்காம் Cofton பூங்காவில் நிறைவேற்றவுள்ள திருப்பலியில் வணக்கத்துக்குரிய கர்தினால் ஜான் ஹென்றி நியூமேனை முத்திப்பேறு பெற்றவராக அறிவிப்பார் என்பதையும் தெரிவித்தார் இயேசுசபைக் குரு லொம்பார்தி.








All the contents on this site are copyrighted ©.