2010-07-03 15:36:30

திருமண முறிவு குறித்த மெக்சிகோ மாநகரசபை நடவடிக்கைக்கு தலத்திருச்சபை எதிர்ப்பு


ஜூலை03,2010 மெக்சிகோ மாநகரசபை நிர்வாகம், திருமணச் சட்டங்களைத் தளர்த்தியிருப்பது குறித்த தனது அதிருப்தியைத் தெரிவித்துள்ளது மெக்சிகோ நகர உயர்மறைமாவட்டம்

தம்பதியருக்கிடையே ஒப்புரவை ஏற்படுத்துவதை விடுத்து அவர்கள் பிரிவதை ஊக்குவிப்பதாக இந்நடவடிக்கை இருக்கின்றது என்று மெக்சிகோ நகர உயர்மறைமாவட்ட வானொலி மற்றும் தொலைக்காட்சித் துறை இயக்குனர் அருள்திரு ஹோசே தெ ஹேசுஸ் குறை கூறினார்.

மனைவி கர்ப்பமாய் இல்லாத போதும் பிள்ளைகள் சட்டரீதியான வயதை அடைந்த பின்னரும் தம்பதியரில் எவருமே அரசு உதவியைப் பெறாத நிலையிலும் திருமண முறிவு செய்வதற்கு மெக்சிகோ மாநகரசபை கொண்டு வந்துள்ள விதிமுறை அனுமதி வழங்குகிறது.








All the contents on this site are copyrighted ©.