2010-07-03 15:38:23

தார் பாலைவனம் விரிவடைகிறது: புஷ்கர் ஏரி முற்றிலும் வற்றியது


ஜூலை 03, 2010 இராஜஸ்தானின் தார் பாலைவனம், தன் அருகிலுள்ள புகழ்பெற்ற புஷ்கர் ஏரியையும் உள்ளடக்கி, இப்போது விரிவடைந்து வருவதாக அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளனர் விஞ்ஞானிகள்.

இதற்கு அப்பகுதியில் பெருகி வரும் சுரங்கங்கள்தான் முதற்காரணம் என்று விஞ்ஞானிகள் குறை கூறியுள்ளனர்.

இதுகுறித்து ஆராய, பெங்களூரு இந்திய அறிவியல் கழகம் மற்றும் காரக்பூரின் ஐ.ஐ.டி., ஆகியவற்றைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு ஒன்று, புஷ்கருக்குச் சென்று, ஏரி வற்றி பாலைவனமானதற்குப் பல்வேறு காரணங்களைக் கண்டறிந்துள்ளது

இராஜஸ்தானில் உள்ள தார் பாலைவனம், அஜ்மீர் நகர் அருகில், ஆரவல்லி மலைத் தொடரின் அடிவாரத்தில் உள்ளது. இங்குள்ள பெரிய ஏரி, தற்போது வற்றி விட்டது. இது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று கூறப்படுகின்றது.








All the contents on this site are copyrighted ©.