2010-07-02 16:29:42

ஜூலை 03. நாளும் ஒரு நல்லெண்ணம்


யார் தலைவன்?

இன்றைய தலைவர்கள் எப்படியிருக்கிறார்கள்?

தலைவனாவதற்குரிய வழியாக நாம் நினைப்பது என்னென்ன?

ஓர் அரசியல் தலைவரின் வாரிசாக இருக்க வேண்டும்.

அல்லது, குறைந்தபட்சம் ஒரு சில படங்களிலாவது கதாநாயகனாகத் தோன்றியிருக்கவேண்டும்.

அல்லது, எப்படியாவது சம்பாதித்து, பல கோடிகளுக்கு அதிபதியாக இருக்க வேண்டும்.

வாழ்க்கைக்கும் வார்த்தைக்கும் தொடர்பில்லாதவனாக இருக்கவேண்டும்.

தனிமனித ஒழுக்கங்கள் குறித்துக் கவலைப்படாதவனாக இருக்கவேண்டும்.

அடிக்கடி கட்சி மாறவும், அதையே நியாயப்படுத்தவும் தெரிந்திருக்கவேண்டும்.

சுய மரியாதையைத் தியாகம் செய்யத் தெரிந்தவனாக இருக்கவேண்டும்.

காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடையில் பொதுப்பிரச்னைக்காக உண்ணாவிரதமிருக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

அதைப் பார்க்கப் பெரும் கூட்டம் கூட்ட அறிந்திருக்க வேண்டும்.

மக்களை அடிமைகளாக்கி, அந்த அடிமைகளைக் கொண்டு ஏணி அமைத்து அந்த ஏணியின் உச்சியில் ஏறி அரசாளத் தெரிந்தவனே தலைவன்.

இன்றைய அரசியலை மிகைப்படுத்தி கிண்டல் பண்ணுகிறீர்களே, இது நியாயமா என்று கேட்காதீர்கள்.

மேலே கூறிய தகுதிகள் இருந்தால் நீங்கள் அரசியல் செய்யலாம்.

ஏனெனில், படித்தவர்கள், பண்புள்ளவர்கள், பிறருக்காக உழைக்கத் தெரிந்தவர்கள்தான் அரசியலுக்கு வருவதே இல்லையே!








All the contents on this site are copyrighted ©.