2010-07-01 15:08:28

ஜூலை 02 நாளும் ஒரு நல்லெண்ணம்


என் நண்பர் இன்று கொஞ்சம் அதிகமாகவே சலித்துக் கொண்டார். சே.. என்னடா உலகம்... என்ன சொன்னாலும் எதைச் செய்தாலும் ஏதாவது சொல்லி, பிரச்னையைக் கிளப்புகிறார்களே என்று முணுமுணுத்தார். இது பலரின் முணுமுணுப்பும்கூட. எல்லாப் பிரச்னைகளுக்கும் ஒரு தீர்வு உண்டு. எப்படி? அதை அணுகும் விதத்தைப் பொருத்து. முதலில் பிரச்னையின் காரணம், அதன் பின்னணி பற்றிப் புரிந்துகொள்ள வேண்டும். பிரச்னையின் விளைவுகள் எப்படி இருக்கும்? நல்லது என்றால், அதை எப்படிச் சாத்தியப்படுத்துவது? கெட்டது என்றால், அதை எப்படிச் சமாளிப்பது? இப்படி சிந்தித்தாலே பாதிப் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும். அறிவியலாளர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொன்னார் - "புத்திசாலித்தனம் என்பது தீர்வுகளைக் கண்டடைவதில் இல்லை. எவ்வளவு தூரம் நீங்கள் அந்தப் பிரச்னையைச் சமாளிக்கிறீர்கள் என்பதில் இருக்கிறது!" என்று.







All the contents on this site are copyrighted ©.