2010-07-01 15:20:28

சிலுவைகள் மதசார்பற்ற நிலையை வலியுறுத்தும் மதிப்பீடுகளுக்கு மாறானது அல்ல - இந்திய மனித உரிமைப் பணியாளர் லெனின் ரகுவன்ஷி


ஜூலை 01, 2010 இத்தாலிய வகுப்பறைகளில் மாட்டப்பட்டுள்ள சிலுவைகள் அகற்றப் பட வேண்டுமென்ற வழக்கு ஐரோப்பிய மனித உரிமைகள் நீதி மன்றத்தில் இப்புதன் முதல் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், இத்தாலிய வகுப்பறைகளில் மாட்டப்பட்டுள்ள சிலுவைகள் மதசார்பற்ற நிலையை வலியுறுத்தும் மதிப்பீடுகளுக்கு மாறானது அல்ல என்று இந்தியாவில் மனித உரிமைகளுக்காக உழைக்கும் லெனின் ரகுவன்ஷி கூறினார்.
ஜூன் மாத இறுதியில் ஜெர்மனியின் Weimar நகரத்தின் மனித உரிமைகள் விருதைப் பெற்ற லெனின் ரகுவன்ஷி, இயேசு கிறிஸ்து உலகிற்கு அமைதி, ஒப்புரவு, அஹிம்சை, நீதி இவற்றைக் கொண்டு வந்தவர் என்பதால், குழந்தைகள் இந்த வரலாற்று சிறப்பு மிக்கவரைப் பற்றி அறிந்து கொள்வதில் எந்த வித தடையும் இருக்கக் கூடாதென்று கூறினார்.
மனித உரிமைகள், குடியரசு, மத சார்பற்ற நிலை ஆகிய மதிப்பீடுகள் வெற்றிடத்தில் உருவாவதில்லை, மாறாக, அவை ஒரு நாட்டின் கலாச்சாரத்திலும் வரலாற்றிலும் உருவாகிறது என்று ரகுவன்ஷி மேலும் கூறினார்.Weimer நகர மனித உரிமை விருதைப் பெற்றுள்ள முனைவர் லெனின் ரகுவன்ஷி, உத்தர பிரதேசத்தில் உள்ள தலித், பழங்குடியினரிடையே Peoples‘ Vigilance Committee on Human Rights ( PVCHR ) என்ற அமைப்பை ஏற்படுத்தி கடந்த 15 ஆண்டுகள் உழைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.







All the contents on this site are copyrighted ©.