2010-07-01 15:19:11

கிறிஸ்தவ ஐக்கியத்திற்கான திருப்பீட அவையின் புதிய தலைவர் சுவிட்சர்லாந்தின் ஆயர் குர்த் கோச்


ஜூலை 01, 2010 கிறிஸ்தவ ஐக்கியத்திற்கான திருப்பீட அவையின் புதிய தலைவராக சுவிட்சர்லாந்தின் பசிலே ஆயர் குர்த் கோச்சை நியமித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
கிறிஸ்தவ ஐக்கியத்திற்கான திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் வால்டெர் காஸ்பெர் வயதின் காரணமாக பணி ஓய்வு பெறுவதை முன்னிட்டு, ஆயர் கோச்சை பேராயர் நிலைக்கு உயர்த்தி அவ்வவையின் தலைவராக நியமித்துள்ளார் பாப்பிறை.
1950ம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் பிறந்த ஆயர் கோச், லுசெர்ன் பல்கலைக்கழகத்தின் இறையியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளதுடன் 60க்கும் மேற்பட்ட புத்தகங்கள் மற்றும் கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார்.
இதற்கிடையே, இது நாள் வரை ஐ.நா.விற்கான திருப்பீடத்தின் நிரந்தரப்பார்வையாளராக இருந்த பேராயர் செலஸ்தீனோ மிலியோரேயை போலந்திற்கான திருப்பீடத்தூதுவராக நியமித்துள்ளார் திருத்தந்தை. மேலும், கர்திகனால் Marc Quellet ஐ திருப்பீடத்தின் ஆயர்களுக்கான திருப்பேராயத்தின் புதிய தலைவராகவும், பேராயர் ரினோ ஃஃபிஸிகெல்லாவை புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய நற்செய்தி அறிவிப்புக்கான திருப்பீட அவையின் தலைவராகவும் அறிவித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.







All the contents on this site are copyrighted ©.