2010-06-30 14:54:51

பழங்குடி மக்களின் அனுதின வாழ்வை உயர்த்துவதே புதிய மறைமாவட்டத்தின் முக்கிய நோக்கமாக இருக்கும் மியான்மார் ஆயர்


ஜூன்30,2010 பழங்குடி மக்களின் அனுதின வாழ்வை உயர்த்துவதே Kalay மறைமாவட்டத்தின் முக்கிய நோக்கமாக இருக்கும் என்று ஆயர் Felix Lian Khen Thang கூறினார்.
இச்செவ்வாயன்று மியான்மாரில் உருவாக்கப்பட்ட Kalay என்ற புதிய மறைமாவட்டத்தின் முதல் ஆயராகப் பொறுப்பேற்ற ஆயர் Felix இவ்வாறு கூறினார்.
மே மாதம் 22ம் தேதி திருத்தந்தையால் அறிவிக்கப்பட்ட இந்தப் புதிய மறைமாவட்டம், புனித பேதுரு, பவுல் ஆகியோரின் திருநாளான இச்செவ்வாயன்று, இரு பேராயர்கள், 11 ஆயர்கள் நிகழ்த்தியக் கூட்டுத் திருப்பலியில் அதிகாரப் பூர்வமாக துவங்கப்பட்டது.
இந்தத் திருப்பலியில் Kalay மறைமாவட்டத்தின் ஆயர் Felix ஐந்து புதிய குருக்களுக்குத் திருநிலைப்பாடு வழங்கினார்.
புதிய மறைமாவட்டத்தில் உள்ள கல்வி தரத்தை உயர்த்துவதன் மூலம், இங்குள்ள மக்கள் பல இடங்களுக்கும் குடிபெயர்ந்து செல்வதைத் தடுப்பதும், இவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதும் மறைமாவட்டத்தின் தற்போதைய சவால்கள் என்று ஆயர் Felix கூறினார்.Kalay மறைமாவட்டத்தில் 22 பங்குகள், 51 குருக்கள், 117 அருட்சகோதரிகள், 52,000 விசுவாசிகள் உள்ளனர் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.