2010-06-30 14:55:49

ஒரிஸ்ஸாவில் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த கிறிஸ்தவச் சிறுவர் சிறுமிகளை இந்து தீவிரவாதக் குழு கேள்விகள் கேட்டுள்ளது


ஜூன்30,2010 ஒரிஸ்ஸாவில் கோடை விடுமுறை முடிந்து, இத்திங்களன்று பள்ளிக்குத் திரும்பிக் கொண்டிருந்த கிறிஸ்தவச் சிறுவர் சிறுமிகளை இந்து தீவிரவாதக் குழு ஒன்று தடுத்து நிறுத்தி, கேள்விகள் கேட்டுள்ளது.
இந்தூரில் பள்ளிக்குத் திரும்பிய குழந்தைகளை Dharam Rakshak Samiti என்ற குழு தடுத்து நிறுத்தி, காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று மூன்று மணி நேரம் கேள்விகள் கேட்டதாகச் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
அக்குழந்தைகள் வலுக்கட்டாயமாக மனமாற்றம் செய்யப்பட்டனர் என்ற வழக்கில் பதிவு செய்யப்பட வேண்டுமென இந்த அடிப்படை வாதக் குழுவினர் வற்புறுத்தியதாகவும், அதற்கு எந்த வித ஆதாரமும் இல்லாததால், அந்தப் புகாரைப் பதிவு செய்ய வில்லை என்றும் காவல் துறை அதிகாரி ஒருவர் கூறினார்.
கள்ளம் கபடமற்ற குழந்தைகளை இந்தக் கொடுமைக்கு ஆளாக்கியது உண்மையிலேயே அதிர்ச்சியையும் வேதனையையும் தருகிறதென இந்தூர் மறைமாவட்டத்தின் அதிகாரப் பூர்வ பேச்சாளர் அருள்தந்தை Cherian Pulickal கூறினார்.குழந்தைகளைத் தேவையில்லாமல் வதைத்த இந்த அடிப்படை வாத குழுவினரைக் கைது செய்ய வேண்டுமென மத்திய பிரதேச கிறிஸ்துவ அமைப்பின் அதிகாரி Sylvester Gangle செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.







All the contents on this site are copyrighted ©.