2010-06-29 15:51:22

உலக அளவில் உணவுக்கொள்கைகள் மாற்றியமைக்கப்படவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர் மதத்தலைவர்கள்


ஜூன் 29,2010. உலகில் நூறு கோடி மக்கள் பசியால் வாடுவதை மனதிற்கொண்டு, உலக அளவில் உணவுக்கொள்கைகள் மாற்றியமைக்கப்படவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர் மதத்தலைவர்கள்.

கானடா கத்தோலிக்க காரித்தாஸின் உயர் இயக்குனர் மைக்கேல் கேசி உரைக்கையில், உலகின் பல பகுதிகள் பசியால் வாடும் இன்றைய நிலையில் சிறு விவசாயிகளை ஊக்குவிக்கும் விவசாயக் கொள்கைகள் வகுக்கப்படவேண்டும் என விண்ணப்பித்தார். உணவு உற்பத்திக்கான பழைய அர்ப்பணங்கள் புதுப்பிக்கப்படவேண்டும், தட்ப வெட்ப நிலை மாற்றம் குறித்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பவைகளையும் வலியுறுத்தினார் அவர்.

பணக்கார நாடுகள் தங்கள் வருமானத்தின் 0.7 விழுக்காட்டை வெளிநாட்டு உதவிகளுக்கென செலவழிக்க வேண்டும் என்ற உறுதிப்பாட்டையும் நினைவுறுத்தியுள்ளனர் மதத்தலைவர்கள்.








All the contents on this site are copyrighted ©.