2010-06-29 15:48:15

இந்திய புரோட்டஸ்டான்ட் கிறிஸ்தவ சபையின் மனித உரிமைகள் விருது கத்தோலிக்க குரு ஒருவருக்கு வழங்கப்படுகிறது


ஜூன் 29,2010 சமூக நீதிக்காக உழைத்ததெற்கென கர்நாடகாவின் கத்தோலிக்க குரு ஒருவருக்கு மனித உரிமைகள் விருதை வழங்கியுள்ளது இந்தியாவின் புரோட்டஸ்டான்ட் கிறிஸ்தவ சபை.

புரோட்டஸ்டான்ட் கிறிஸ்தவ சபையின் M.A. Thomas தேசிய மனித உரிமைகள் விருதைப் பெறும் முதல் கத்தோலிக்க குருவான P.J. Jacob, விமோச்சனா என்ற வளர்ச்சி மையம் மூலம் மக்களின் உரிமைகளுக்காகவும் சமூக நீதிக்காகவும் கடந்த 45 ஆண்டுகளாகச் சேவையாற்றியுள்ளார்.

ஒரு இலட்ச ரூபாயையும் ஒரு சான்றிதழையும் உள்ளடக்கிய இவ்விருதை ஆகஸ்டில் பெறவுள்ள குரு P.J.Jacob, ஏழைகளுக்கான கல்வி நிலையங்களையும் உருவாக்கியுள்ளார்.








All the contents on this site are copyrighted ©.