2010-06-28 15:40:00

முத்திப் பெற்ற அருட்சகோதரர் Estephan தாழ்மையும் அன்பும் பக்தியும் நிறைந்தவர் - திருத்தந்தை


ஜூன்28,2010 இஞ்ஞாயிறன்று லெபனன் நாட்டில் முத்திப்பேறு பெற்ற நிலைக்கு உயர்த்தப்பட்ட மாரனைட்ரீதி கத்தோலிக்க அருட்சகோதரர் Estéphan Nehmé பற்றிக் குறிப்பிட்டு அவரின் பாதுகாவலில் லெபனன் நாட்டை அர்ப்பணிப்பதாக ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில் கூறினார் திருத்தந்தை.

1938ம் ஆண்டில் இறந்த அருட்சகோதரர் Estephan னின் உடல் அழியாமல் இருந்தது என்றும், இவர் தாழ்மையும் அன்பும் பக்தியும் நிறைந்த துறவி என்றும் பாராட்டினார் திருத்தந்தை.

மாரனைட்ரீதி கத்தோலிக்கர் புனித மாரனின் ஆன்மீகத்தைப் பின்பற்றுகிறவர்கள். இந்த கீழைரீதிக் கிறிஸ்தவர்கள், தொடக்கத்திலிருந்தே திருப்பீடத்திற்குப் பிரமாணிக்கமாக இருப்பவர்கள். தற்போதைய சிரிய நாட்டில் 4ம் நூற்றாண்டில் வாழ்ந்த துறவியாகிய மாரன், இறந்ததன் 1600ம் ஆண்டை இவ்வாண்டில் திருச்சபை சிறப்பிக்கிறது.








All the contents on this site are copyrighted ©.