2010-06-28 15:43:50

திருமணமின்றியே சேர்ந்து வாழும் தம்பதியரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து இங்கிலாந்து அரசின் அக்கறைக்கு அழைப்பு விடுத்துள்ளது பிறன்பு அமைப்பு ஒன்று.


ஜூன் 28, 2010. திருமணமின்றியே சேர்ந்து வாழும் தம்பதியரின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்து வருவது குறித்து இங்கிலாந்து அரசு அதிக அக்கறை செலுத்தவேண்டும் என வினண்ணப்பித்துள்ளது அந்நாட்டின் பிறன்பு அமைப்பு ஒன்று.

தற்போதைய புள்ளிவிவரங்களின்படி இங்கிலாந்தில் திருமணமின்றி சேர்ந்து வாழும் தம்பதியரின் எண்ணிக்கை 15 இலட்சத்திலிருந்து 2033ம் ஆண்டில் 38 இலட்சமாக உயரும் என உரைத்த இப்பிறரன்பு அமைப்பு, திருமணம் இன்றி சேர்ந்து வாழும் தம்பதியரின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது குடும்ப உறவு முறிவுகளும் அதிகரிப்பது தவிர்க்கமுடியாதது ஆகின்றது என்றது.

திருமணமின்றி சேர்ந்து வாழ்வோர் பிரிந்து செல்வதற்கு 60 விழுக்காடு அதிக வாய்ப்பு உள்ளது என அண்மைப் புள்ளி விவரங்களையும் சுட்டிக்காட்டியுள்ளது இங்கிலாந்தின் பிறரன்பு அமைப்பு.

திருமணமின்றி சேர்ந்து வாழ்வது என்பது ஒருவர் மற்றவருக்கான அர்ப்பணமின்றியே துவக்கப்படுவதால், பிரச்னைகள் என வரும்போது பிரிந்து செல்வது எளிதான ஒன்றாகத் தெரிவதால் மணமுறிவுகளின் எண்ணிக்கை அதிகரிக்கின்றன எனவும் கவலையை வெளியிட்டுள்ளனர் இங்கிலாந்தின் வெஸ்ட்மின்ஸ்டர் தலத்திருச்சபையின் அதிகாரப்பூர்வப் பேச்சாளர்.








All the contents on this site are copyrighted ©.