2010-06-28 15:47:58

சிங்கப்பூர் தலத்திருச்சபையின் அகதிகள் குறித்த அக்கறை.


ஜூன் 28, 2010 அகதிகளுடன் ஒருமைப்பாட்டுணர்வில் ஒன்றிணைந்து நிற்க வேண்டிய சிங்கப்பூர் தலத்திருச்சபையின் கடமை குறித்து வலியுறுத்தியுள்ளார் அந்நாட்டு பேராயர் நிகோலாஸ் கியா.

போர் மற்றும் இயற்கைப்பேரிடரால் பாதிக்கப்பட்ட இடங்கள் என 56 நாடுகளில் பணியாற்றும் JRS என்ற இயேசு சபையின் அகதிகளுக்கான அமைப்பு ஏற்பாடு செய்த அகதிகளுக்கான திருப்பலியில் உரையாற்றிய பேராயர், தங்கள் வீடுகள், உடைமைகள், தனித்தன்மை மற்றும் வருங்காலத்தை இழந்து நிற்கும் அகதிகளின் தேவைகளை அறிந்து அவர்களுக்கு பணியாற்றி பக்கபலமாய் இருக்கவேண்டியது திருச்சபை அங்கத்தினர்களின் கடமை என்றார்.

1980ம் ஆண்டுகளில் வியட்நாம் அகதிகள் சிங்கப்பூருக்கு குடிபெயர்ந்ததிலிருந்து இன்றுவரை அகதிகள் பிரச்னை என்பது ஒரு பெரும் சவாலாகவே உள்ளது என்றார் பேராயர் கியா.

சிங்கப்பூரில் அகதிகள் பெரும் கட்டுப்பாடுகளை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.