2010-06-28 15:50:19

இந்தோனேசியாவில் தீவிரவாதமும் சகிப்பற்ற தன்மைகளும் அதிகரித்துள்ளதாக கவலையை வெளியிட்டுள்ளது லண்டனைச் சேர்ந்த உரிமைகள் குழு ஒன்று.


ஜூன் 28, 2010 இந்தோனேசியாவில் தீவிரவாதமும் சகிப்பற்ற தன்மைகளும் அதிகரித்து மத சுதந்திரத்திற்கான ஆபத்தும் அதிகரித்துள்ளதாக கவலையை வெளியிட்டுள்ளது லண்டனைச் சேர்ந்த உரிமைகள் குழு ஒன்று.

இந்தோனேசியாவில் இரு வார பயணத்தை மேற்கொண்டு திரும்பிய உலக கிறிஸ்தவ ஒருமைப்பாட்டு உரிமை குழு உரைக்கையில், கத்தோலிக்க, புரோட்டஸ்டாண்ட், இஸ்லாம் மற்றும் மதங்களிடையேயான இணக்க அவை ஆகியவைகளை சந்தித்தபின் இவ்வெண்ணத்தைப் பெற்றதாகத் தெரிவித்தது.

கடந்த ஆண்டில் மட்டும் 30 கோவில்கள் மற்றும் கோவில் உடைமைகள் மீதான தாக்குதல்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட மத உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக இக்குழு, புள்ளி விவரங்களையும் வெளியிட்டுள்ளது.

தாக்குதல்களிலிருந்து சிறுபான்மை சமூகத்தினரைக் காக்க வேண்டிய அரசின் கடமையை வலியுறுத்தியுள்ளதோடு, பல மதங்கள் இணக்கத்தில் வாழும் ஒரு சமூகச்சூழலை உருவாக்க உதவவேண்டும் என விண்ணப்பித்துள்ளது உலக கிறிஸ்தவ ஒருமைப்பாட்டு குழு.








All the contents on this site are copyrighted ©.