2010-06-25 16:31:34

ஜி-8, ஜி-20 நாடுகளின் தலைவர்கள் உலக உணவு நெருக்கடியைக் களைவதற்கு சர்வதேச காரித்தாஸ் அழைப்பு


ஜூன்25,2010 மேலும், கானடாவில் கூட்டங்களை நடத்தும் ஜி-8 மற்றும் ஜி-20 நாடுகளின் தலைவர்கள் உலகில் அதிகரித்து வரும் உணவு நெருக்கடியைக் களைவதற்கு ஆவன செய்யுமாறு சர்வதேச காரித்தாஸ் அழைப்பு விடுத்தது.

பல ஆண்டுகள் தவறாக வழிநடத்தப்பட்ட பொருளாதார மற்றும் வேளாண்மை குறித்த கொள்கைகளால், உலகின் விவசாயிகளும் மக்களும் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்று காரித்தாஸின் அறிக்கை கூறியது.

தற்சமயம் உலகில் நூறு கோடிப்பேர் பசியால் மிகவும் வாடுகின்றனர் எனவும் ஏழுபேருக்கு ஒருவர் அடிப்படை வாழ்வுக்குத் தேவையான உணவு இன்றி உள்ளனர் எனவும் அவ்வறிக்கை மேலும் கூறியது.

வெப்பநிலை மாற்றத்தால் உணவுப் பாதுகாப்பு மேலும் மோசமடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக உரைத்த கானடா காரித்தாஸ் இயக்குனர் Michael Casey, அதிக உதவி தேவை, அதேசமயம் அது சரியான வழியில் செலவழிக்கப்பட வேண்டுமென்றும் பரிந்துரைத்தார்.

ஏழை நாடுகள் வெப்பநிலை மாற்றத்தைச் சமாளிக்கவும், நிலையான வளர்ச்சியை நோக்கிச் செல்லவும் 2020ம் ஆண்டு வரை ஆண்டுக்கு 195 கோடி டாலரைக் கொடுத்து உதவுமாறு காரித்தாஸ் பணக்கார நாடுகளைக் கேட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.