2010-06-25 16:30:35

சர்வதேச சமயத் தலைவர்கள் – உயிரோட்டமானத் தலைமைத்துவத்துக்கு அழைப்பு




ஜூன்25,2010. உலகில் வறுமையை ஒழிக்கவும், உறுதியான சுற்றுச்சூழலை வளர்க்கவும், உலகளாவிய கூட்டுச்செயல்பாட்டைக் கட்டிஎழுப்பவும் வேண்டுமென ஏறக்குறைய எண்பது சர்வதேச சமயத் தலைவர்கள் பணக்கார நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஜி-8 எனப்படும் உலகின் பணக்கார நாடுகள், கானடா நாட்டு Ontario வின் Huntsville வில், இவ்வெள்ளியும் சனியும், ஜி-20 கூட்டமைப்பு நாடுகள் Toronto வில் இச்சனியும் ஞாயிறும் கருத்தரங்குகளை நடத்துவதை முன்னிட்டு பல்வேறு சமயத் தலைவர்கள் இந்நாடுகளுக்கு இவ்வழைப்பை முன்வைத்துள்ளனர்.

"உயிரோட்டமானத் தலைமைத்துவத்துக்கான நேரம்" என்ற தலைப்பில் நான்கு பக்க அறிக்கையை சமர்ப்பித்துள்ள இச்சமயத் தலைவர்கள், 2001ம் ஆண்டில் ஐ.நா.நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட மில்லென்னிய வளர்ச்சித் திட்ட இலக்குகள் நிறைவேற்றப்படுவதற்குத் தேவைப்படும் நிதியுதவி அளிக்குமாறு கேட்டுள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.