2010-06-24 16:01:28

புனித ஜான் போஸ்கோவின் புனிதப் பொருட்கள் அடங்கிய பேழை ஒன்று நவம்பர் மாதம் ஆசியாவை வந்தடையும்


ஜூன்24,2010 புனித ஜான் போஸ்கோ பிறந்த 200ம் ஆண்டைக் கொண்டாடும் வகையில் அவரது புனிதப் பொருட்கள் அடங்கிய பேழை ஒன்று உலகத்தின் பல பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்படும் இவ்வேளையில், அந்தப் புனிதப் பொருட்கள் நவம்பர் மாதம் ஆசியாவை வந்தடையும் என்று சலேசிய சபையின் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இவ்வாண்டு ஏப்ரல் 25 அன்று இத்தாலியின் தூரின் பகுதியில் Valdoccoவில் ஆரம்பமான இந்தப் பயணம், தற்போது தென் அமெரிக்க நாடுகளில் நடை பெறுகிறதென்றும், நவம்பர் முதல் தேதி இப்புனிதப் பொருட்கள் அடங்கிய பேழை கொரியாவை அடைந்து அங்கிருந்து ஆசிய பயணத்தை துவக்கும் என்றும் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
2011ம் ஆண்டு மே மாதம் இந்தப் புனித பொருட்கள் இந்தியாவை அடையும்; அங்கிருந்து இலங்கை, ஆப்ரிக்க நாடுகள் இவைகளில் எடுத்துச் செல்லப்பட்டு மீண்டும் 2014 ஆம் ஆண்டு தூரின் அடையும் என்று கூறப்படுகிறது.1815ம் ஆண்டு இத்தாலியில் பிறந்த தொன் போஸ்கோ, 1859ம் ஆண்டு ஏழ்மையில் வாடும் குழந்தைகளுக்கென சலேசிய சபையை நிறுவினார் என்பதும் இன்று இச்சபையைச் சார்ந்த குருக்கள், அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள் 120 நாடுகளில் பணி புரிந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.







All the contents on this site are copyrighted ©.