2010-06-24 15:31:50

ஜூன் 25 நாளும் ஒரு நல்லெண்ணம்


“என் வாழ்க்கையில் ஏதாவது வருந்துகிறேன் என்று சொன்னால், அது உயர்ந்த மொழியாகிய தமிழ் மொழியை கற்றுக் கொள்ளும் வாய்ப்பு வாய்க்கவில்லையே என்பது பற்றித்தான்” – இப்படித் தமிழைப் பெருமைப்படுத்திக் கூறியவர் காந்தியடிகள். "தமிழனாகப் பிறக்கவில்லையே' என ஏங்கியதால், தனது கல்லறையில், "தான் ஒரு தமிழ் மாணவன்' எனப் பொறிக்க விரும்பியவர் ஜி.யூ.போப். இவர், திருக்குறள், நாலடியார், திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிப் பெயர்த்தவர். “தமிழ் மொழியின் வரலாறு இந்தியாவுக்குப் பெருமை தரவல்லது. இந்திய இலக்கியத்துக்கும், ஜனநாயகத்துக்கும் தமிழ் மொழியின் கொடை பெரிது. திரைகடல் ஓடியும் திரவியம் தேடு, யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற உயர்ந்த, பரந்த உலக வணிகத்தையும், சகோதரத்துவத்தையும் பேணிக்காத்து வரும் புராதானமான உலக இனம், தமிழ் இனம். உலக மொழி தமிழ் மொழி. இது இந்தியாவிற்கு கிடைத்த அளவிட முடியாத பெருமை”- இவ்வாறு சொன்னவர் இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல்








All the contents on this site are copyrighted ©.