2010-06-23 16:10:57

பாகிஸ்தான் அரசு உருவாக்கியுள்ள சட்டங்கள் சிறுபான்மை மதங்களுக்கு எதிராகக் காட்டப்படும் பாகுபாடான நிலையை உருவாக்கி வருகிறது - அருட்தந்தை Peter Jacob


ஜூன்23,2010 அடிப்படை வாதத்தை அழிப்பது, இஸ்லாமிய தனித்துவத்தைப் பாதுக்காப்பது ஆகிய காரணங்களைக் காட்டி, பாகிஸ்தான் அரசு உருவாக்கியுள்ள சட்டங்கள் சிறுபான்மை மதங்களுக்கு எதிராகக் காட்டப்படும் பாகுபாடான ஒரு நிலையை உருவாக்கி வருகிறதென அருட்தந்தை Peter Jacob கூறினார்.
பாகிஸ்தான் அரசு கூறும் இவ்விரு காரணங்களும் முஸ்லீம் அல்லாதோரை பல நெருக்கடிகளுக்கு ஆளாக்கும் ஒரு முயற்சியே என்றும், தேவ நிந்தனை சட்டம் என்ற போர்வையில் இன்னும் பலரை கட்டுப் படுத்தும் வழியே என்றும் பாகிஸ்தான் ஆயர் பேரவையின் நீதி மற்றும் ஒற்றுமை குழுவின் பொதுச் செயலரான அருட்தந்தை Peter Jacob கூறினார்.
ஐரோப்பிய நாடுகளில் பயணம் மேற்கொண்டுள்ள அருட்தந்தை Jacob, 1986 முதல் 2009ம் ஆண்டு வரை குரானுக்கும் இறைவாக்கினர் முகம்மதுக்கும் எதிராகப் பேசிய குற்றத்திற்காக 964 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், இவர்களில் 479 பேர் முஸ்லிம்கள், ஏனையோர் கிறிஸ்துவ அல்லது இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் என்று அருட்தந்தை கூறினார்.அரசின் இந்தப் போக்கைக் கண்டித்து பாகிஸ்தான் திருச்சபை முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகக் கூறிய அருட் தந்தை, இம்முயற்சிக்கு நாட்டில் வேறு பல சமுதாய அமைப்புகள் ஆதரவு தருவது மகிழ்ச்சி தரும் செய்தி என்று கூறினார்.







All the contents on this site are copyrighted ©.