2010-06-23 16:09:53

சுற்றுச் சூழல் பாதுக்காப்பு குறித்த பாட திட்டத்தை பள்ளிகளின் கல்வித் திட்டத்தில் ஒரு பகுதியாக மாற்ற இந்திய அரசு ஒப்புதல்


ஜூன்23,2010 சுற்றுச் சூழல் பாதுக்காப்பு குறித்த பாட திட்டத்தை பள்ளிகளின் கல்வித் திட்டத்தில் ஒரு பகுதியாக மாற்றும் மத்திய பிரதேசத் தலத்திருச்சபையின் முயற்சிக்கு இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
“Matr Chhaon Abhiyan”, அதாவது, “அன்னை பூமியைக் காப்போம்” என்ற பெயர் தாங்கிய இந்தத் திட்டம் மத்திய பிரதேசத்தில் உள்ள 50 பள்ளிகளில் சென்ற ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதென்றும், அந்தப் பாடத் திட்டத்தைத் தற்போது இந்தியாவின் மனித வள மேம்பாட்டுத் துறை பள்ளிப் பாடத் திட்டமாக அறிமுகப்படுத்த ஒத்துக்கொண்டது என்றும் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.இத்திட்டத்தின் படி, ஐந்தாம் வகுப்பு முதல், ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர் ஒரு மரக்கன்றை நட்டு, அதனை மூன்று ஆண்டுகள் பேணி வளர்க்க வேண்டும் என்ற பழக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த முயற்சியில் ஈடுபடும் மாணவர்கள் சுற்றுச் சூழல் பாடத்தில் தேர்ச்சி பெற இந்த முயற்சி முக்கியம் என்று மத்திய பிரதேச தலத் திருச்சபையின் அதிகாரப் பூர்வப் பேச்சாளர் அருட்தந்தை ஆனந்த் முட்டுங்கல் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.