2010-06-22 14:39:58

ஹாங்காங்கின் புதிய தேர்தல் சீர்திருத்த விதிகள் குறித்து எச்சரித்துள்ளார் அம்மறைமாவட்ட கர்தினால் Joseph Zen Ze-kiun.


ஜூன் 22, 2010. ஹாங்காங்கின் ஜனநாயகக்கட்சி பரிந்துரைத்துள்ள புதிய தேர்தல் சீர்திருத்த விதிகள் எதிர்விளைவுகளையேக் கொணரும் என அஞ்சுவதாக கவலையை வெளியிட்டுள்ளார் அம்மறைமாவட்ட கர்தினால் Joseph Zen Ze-kiun.

ஹாங்காங்கின் நிர்வாக அரசியல் அமைப்பு பிரதிநிதிகளுள் பாதிப் பேரே மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் நிலை இருப்பதை மாற்றி, அவ்வெண்ணிக்கையை அதிகரிக்கும் புதிய பரிந்துரைகள் நல்லதே எனினும் அது குறித்து போதிய விளக்கங்கள் மக்களுக்கு வழங்கப்படாமல் அவசர கதியில் இப்புதனன்றே தேர்தலை நடத்துவது எதிர் விளைவுகளையே கொணரும் ஆபத்து உள்ளது என்றார் கர்தினால்.

வெற்றி பெறுபவர்களின் நியமனம் குறித்தோ தலைமை நிர்வாக அதிகாரியைத் தேர்ந்தெடுப்பதற்கானத் தேர்தல் முறை குறித்தோ எவ்வித விளக்கங்களும் இதுவரை அறிவிக்கப்படவில்லை எனவும் கூறினார் கர்தினால் Joseph Zen Ze-kiun.

ஹாங்காங் பகுதியில் இப்புதனன்று 34 இலட்சத்து 30 ஆயிரம் பேர் வாக்களிக்க உள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.