2010-06-21 16:02:30

ஜூன் 22 நாளும் ஒரு நல்லெண்ணம்


அந்த மூதாட்டி ஒவ்வொரு நாளும் ஆலயம் சென்று மெழுகுதிரி ஏற்றிச் செபம் செய்வது வழக்கம். அச்சமயத்தில், கடவுளே, நான் நீண்ட காலம் வாழ்ந்து விட்டேன். என்னைச் சீக்கிரம் உன்னிடம் அழைத்துக் கொள்ளும். நான் அதற்குத் தயாராக இருக்கிறேன் என்ற செபம் தவறாது இடம் பெறும். இதைக் கேட்டுக் கொண்டிருந்த ஓர் ஆள், வேடிக்கை செய்ய நினைத்தான். அன்று மூதாட்டி வருவதற்கு முன்னர் அந்தத் திருவுருவத்தின் பின்னால் ஒளிந்து கொண்டான். அந்த அம்மா வந்து வழக்கம் போல் செபித்தாள். அவள் செபித்து முடிந்ததும், அங்கு ஒளிந்திருந்த அவன், “மகளே, உனது வேண்டுகோளை ஏற்றுக் கொண்டேன். இன்று இரவு நீ என்னிடம் வந்துவிடுவாய்” என்றான். அதைக் கேட்ட மூதாட்டிக்குப் பயம் வந்து விட்டது. அன்று இரவு தான் இறக்கப் போகிறோம் என்ற உணர்வே கிடுகிடுக்கச் செய்தது. அந்தப் பயத்திலே அவள் அன்று இரவு இறந்துவிட்டாள்.

சொற்களுக்குத்தான் எவ்வளவு வலிமை என்று பாருங்கள். சொற்கள் மனித இதயத்தின் மிகச்சிறந்த, சரியான வெளிப்பாடாக அமைய வேண்டும். சொல்லுக சொல்லில் பயனுடையவை என்று வள்ளுவரும் சொன்னார்







All the contents on this site are copyrighted ©.