2010-06-21 16:02:15

ஜூன் 21 நாளும் ஒரு நல்லெண்ணம்


ஒரு சேவல் தெருமுனையில் நின்று விடாமல் கூவிக் கொண்டே இருந்தது. இதைக் கவனித்துக் கொண்டிருந்த மற்றொரு சேவல் அதனிடம் வந்து, டேய் நண்பா, சிறிது நேரம் வாயை மூடிக் கொண்டு அமைதியாய் இருக்கமாட்டாயா? என்று கேட்டது. அதற்கு அச்சேவல், நான் எதற்கு வாயைப் பொத்திக் கொண்டிருக்க வேண்டும் என்று கேட்டது. அப்போது புத்தி சொல்லவந்த சேவல் சொன்னது – அங்கே பார், நீ சிறிது நேரம் சிந்திக்காமல் கூவிய உன் சத்தத்தினால் உன் உறவுகள் தங்களுக்குள் அடித்துக் கொண்டு சாகிறார்கள் என்று.

பின்னர் அது வந்த வழியே சொல்லிக் கொண்டே போனது – கொழுந்து விட்டெரியும் தீயை மூட்ட ஒற்றைத் தீக்குச்சி போதுமானது. இது தெரியவில்லை என் நண்பனுக்கு என்று.








All the contents on this site are copyrighted ©.