2010-06-21 16:00:26

இங்கிலாந்திற்கான திருத் தந்தையின் திருப்பயணம் உண்மை மகிழ்வை நாம் மீண்டும் கண்டு பிடிக்க ஒரு வாய்ப்பாக அமையும் - ஆயர் Kieran Conry


ஜூன்21, 2010. நாம் பல வகைகளிலும் தன்னலம் மிகுந்த ஒரு சமுதாயமாகி வருகிறோம், எனவே திருத் தந்தையின் இந்தத் திருப்பயணம் உண்மை மகிழ்வை நாம் மீண்டும் கண்டு பிடிக்க ஒரு வாய்ப்பாக அமையும் என்று Arundel மற்றும் Brighton மறைமாவட்டத்தின் ஆயர் Kieran Conry கூறினார்.

திருத்தந்தை இங்கிலாந்தில் வரும் செப்டெம்பர் மாதம் மேற்கொள்ளவிருக்கும் திருப்பயணத்தைக் குறித்து அண்மையில் வெளியான புத்தகத்தையும், இன்னும் பிற ஏற்பாடுகளையும் பற்றிச் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆயர் Conry இவ்வாறு கூறினார்.

திருத்தந்தையின் இந்தத் திருப்பயணம் தொலைக் காட்சியிலும், இணையதளத்திலும் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்பதால், ஒவ்வொரு பங்குக் குழுமமும் தங்கள் ஆன்மீக, சமுதாய வாழ்வைப் புதுப்பித்துக் கொள்ள இது சரியான தருணம் என்று ஆயர் மேலும் கூறினார்.

"இதயம் இதயத்தோடு பேசுகிறது" என்ற மையக் கருத்தில் மேற்கொள்ளப்படும் இந்தத் திருப்பயண நிகழ்வுகள் மூலம் கிறிஸ்துவர்கள் மட்டுமல்லாமல், பிற மதங்களைச் சார்ந்தவர்களும் சமுதாய நலன்களை முன்னிறுத்தும் நோக்கில் திருத்தந்தை அளிக்கும் செய்திகளைக் கேட்கவும், அதன் படி வாழவும் இந்தப் பயணம் உதவும் என்று தான் நம்புவதாக ஆயர் Kieran Conry தெரிவித்தார்.








All the contents on this site are copyrighted ©.