2010-06-19 14:41:41

திருப்பீடத்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையேயான உரையாடல், முரண்பாடுகளைத் தடுக்க முடியும் - சட்டவல்லுநர் அருள்திரு Jaeger


ஜூன்19,2010 திருப்பீடத்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையேயான உரையாடல், கொள்கைமுரண்பாடுகளையும் நிச்சயமற்றதன்மைகளையும் தடுக்க முடியும் என்று சட்டவல்லுநர் அருள்தந்தை David-Maria Jaeger கூறினார்.

இவ்வாரத்தில் நடைபெற்ற, திருப்பீடத்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையேயான நிரந்தரப் பணிக்குழுக் கூட்டம் பற்றிப் பேசிய, இஸ்ரேலில் திருச்சபைக்கும் அரசுக்கும் இடையேயான உறவுகளில் கைதேர்ந்த பிரான்சிஸ்கன் சபை அருள்தந்தை Jaeger இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

புனித இடங்களை ஒருங்கிணைத்தல், திருச்சபை நிறுவனங்களுக்கு வரிவிலக்கு உட்பட்ட பல விவகாரங்கள் இக்கூட்டத்தில் பேசப்பட்டன. இத்தகைய விவகாரங்கள் குறித்த கலந்துரையாடல் 1993ம் ஆண்டே தொடங்கினாலும், உலகளாவிய உடன்பாடுகள் இன்னும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.








All the contents on this site are copyrighted ©.