2010-06-18 15:06:30

மலேசியாவில் அடைக்கலம் தேடுவோர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றனர் – ஆம்னஸ்டி இன்டர்நேஷனல்


ஜூன்18,2010 மலேசியாவில் அடைக்கலம் தேடும் மக்களும் அகதிகளும், திட்டமிட்ட கைதுகள், தடுப்புக் காவல், தப்பிவந்த நாட்டிற்கும் திருப்பி அனுப்பப்படுதல் போன்ற அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றனர் என்று Amnesty International எனும் பன்னாட்டு மனித உரிமைகள் கழகம் அறிவித்தது.

“கைவிடப்பட்டவர்கள், உரிமை மீறப்பட்டவர்கள் : மலேசியாவில் உரிமைகள் மறுக்கப்படும் அகதிகள்” என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்டுள்ள இக்கழகம், மலேசியாவுக்குச் செல்லும் அகதிகளும், அடைக்கலம் தேடுவோரும் சட்டத்திற்குப் புறம்பே அல்லது சரியான ஆவணங்களின்றி வந்தவர்கள் என்ற முறையில் நடத்தப்படுகிறார்கள் என்று கூறுகிறது.

UNHCR என்ற ஐ.நா. அகதிகள் நிறுவனத்தின் புள்ளி விபரங்களின்படி, 88,100 அகதிகள் மற்றும் அடைக்கலம் தேடுவோர், அந்நிறுவனத்தில் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 81,600 பேர் மியான்மாரைச் சேர்ந்தவர்கள்.

1951ம் ஆண்டின் அகதிகள் குறித்த ஐ.நா. ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்திடாததால் அந்நாட்டிற்குச் செல்லும் அகதிகளுக்கு, அகதிகள் என்ற நிலை வழங்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது.

ஜூன் 20 உலக அகதிகள் தினமாகும்.








All the contents on this site are copyrighted ©.