2010-06-18 15:05:06

உலக கிறிஸ்தவ சபைகள் அவை - வறுமையை ஒழிப்பது இயலக்கூடியதே


ஜூன்18,2010 உலகத் தலைவர்கள், பெரிய வங்கிகளுக்கும் இராணுவச் செலவுகளுக்கும் முன்னுரிமை கொடுப்பதைவிடுத்து, ஏழைகளுக்கு முன்னுரிமை கொடுக்குமாறு WCC என்ற உலக கிறிஸ்தவ சபைகள் அவை கேட்டுள்ளது.

“மில்லென்னய வளர்ச்சித்திட்ட இலக்குகள்” (MDGs) குறித்த ஐ.நா.மகாநாடு வருகிற செப்டம்பரில் நடைபெறவிருப்பதை முன்னிட்டு அறிக்கை வெளியிட்ட WCC, வறுமையை ஒழிப்பது அறநெறிப்படி அவசியம் என்றும், அது இயலக்கூடியதே என்றும் கூறியது.

WCC பிரதிநிதிகள் குழு ஒன்று, இந்த அறிக்கையை ஐ.நா.பொது அவையிலும் சமர்ப்பித்துள்ளது.

2015ம் ஆண்டுக்கு முன்னர் மில்லென்னய வளர்ச்சித்திட்ட இலக்குகளை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்ற சர்வதேச சமுதாயம், இன்னும் மீதமிருக்கின்ற 1660 நாட்களில் தீவிரச் செயல்படுமாறு வற்புறுத்தியுள்ளது WCC அவை.








All the contents on this site are copyrighted ©.