2010-06-17 15:09:26

முல்லைதீவுப் பகுதியில் ஐக்கிய நாடுகளின் அரசியல் விவகாரங்களுக்கான துணைப் பொதுச் செயலர் லின் பாஸ்கோ


ஜூன்17,2010 ஐக்கிய நாடுகளின் அரசியல் விவகாரங்களுக்கான துணைப் பொதுச் செயலர் லின் பாஸ்கோ இப்புதன்கிழமை இலங்கையின் முல்லைத்தீவு பகுதிக்கு வருகை தந்தார்.
அங்கு நடைபெறுகின்ற மீள்குடியேற்றம் மற்றும் கண்ணிவெடி அகற்றும் பணிகளை நேரடியாகப் பார்வையிட்டதுடன், அங்கு நடைபெறுகின்ற மறுசீரமைப்பு மற்றும் முன்னேற்றப் பணிகள் குறித்து அரசு அதிகாரிகளுடன் கலந்து பேசினார்.
வற்றாப்பளை பகுதியில் பொதுமக்களைச் சந்தித்து, அவர்களது குறை நிறைகளைக் கேட்டறிந்ததுடன், குமாரபுரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் கண்ணிவெடி அகற்றும் பணிகள் தொடர்பாக இராணுவ அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தனது முல்லைத்தீவு பயணத்தை முடித்துக் கொண்டு கொழும்பு திரும்பிய ஐக்கிய நாடுகள் சபையின் துணைப் பொதுச் செயலர் லின் பாஸ்கோ, இலங்கை அரசுத்தலைவர் மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து பேசியுள்ளார்.







All the contents on this site are copyrighted ©.