2010-06-17 14:32:43

ஜூன் 18 நாளும் ஒரு நல்லெண்ணம்


கார்னீலிய்ஸ் வாண்டர்பில்ட் என்பவர், வேலை தொடர்பாகத் தன்னை வந்து சந்திக்குமாறு ஓர் இளைஞனுக்கு நேரம் ஒதுக்கியிருந்தார். அந்தக் குறிப்பிட்ட நாளில் அந்தக் குறிப்பிட்ட நேரத்துக்காகக் காத்திருந்தார். இளைஞன் வரவில்லை. ஏனெனில் அன்று அவனது வேலை தொடர்பாக ஓர் இரயில்வே அதிகாரியை அவர்கள் சந்திக்க வேண்டியிருந்தது. அவன் இருபது நிமிடங்கள் தாமதமாக வந்தான். அச்சமயத்தில் வாண்டர்பில்ட்டும் ஒரு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகச் சென்று விட்டார். சில நாட்கள் கழித்து அவரைச் சந்தித்தான் அந்த இளைஞன். இருபது நிமிடங்களில் என்ன பெரிய வேறுபாடு வந்து விடும் என்றும் அவன் கேட்டான். அப்போது வாண்டர்பில்ட், வேறுபாடு நிகழ்ந்து விட்டது. உனக்குக் கிடைக்க வேண்டிய வேலை வேறொருவருக்குக் கிடைத்துவிட்டது. எனது நேரத்தை அற்பமாக நினைக்க உனக்கு உரிமையில்லை. இருபது நிமிடங்களில் நான் இரண்டு சந்திப்புக்களை நிகழ்த்துகிறேன் என்று சொன்னார்.








All the contents on this site are copyrighted ©.